கரூர் அருகே சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்தில் பலி,4 பேர் படுகாயம் - MAKKAL NERAM

Breaking

Friday, October 13, 2023

கரூர் அருகே சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்தில் பலி,4 பேர் படுகாயம்


கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆட்டையான்பரப்பு அருகே ஈரோடு அரச்சலூர் பகுதியில் இருந்து காரில் திண்டுக்கல்லை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.அப்போது கரூர் அடுத்து ஆட்டையான்பரப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இருந்து தாறுமாறாக ஓடியது.அப்போது அரவக்குறிச்சியில் இருந்து கரூருக்கு, அரவக்குறிச்சி ராஜபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் டாட்டா ஏசி வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.

அப்போது எதிரே கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சென்டர் மீடியன் தாண்டி எதிரே வந்த டாட்டா ஏசி வாகனம் மீது மோதிய விபத்தில் டாட்டா ஏசி வாகன ஓட்டுனர் சரவணன் சம்பவ இடத்தில் பலி, அந்தவாகனத்தில் வந்த மற்றொரு நபர் காயம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து காரில் வந்த மூன்று நபர்களையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

டாட்டா ஏசி வாகன இடுப்பாட்டில் சிக்கிய சரவணன் உடலை மீட்க கரூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராடி உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாட்டா ஏசி வாகனத்தை எடுத்துக் கொண்டுஅந்த வாகனத்திற்கு முதல் மாத தவணை கட்டுவதற்கு கரூர் பைனான்ஸுக்கு வந்த சரவணன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துள்ளது.


கரூர் மாவட்ட செய்தியாளர் மோகன்ராஜ்

93857-82554

No comments:

Post a Comment