சத்தியமங்கலம்,கொமாரபாளையம் ஊராட்சி இந்திராநகர் அங்கன்வாடி மையத்திற்கு சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் சேர்,ஜமக்காளம் பொருட்கள் வழங்கும் விழா - MAKKAL NERAM

Breaking

Friday, October 13, 2023

சத்தியமங்கலம்,கொமாரபாளையம் ஊராட்சி இந்திராநகர் அங்கன்வாடி மையத்திற்கு சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் சேர்,ஜமக்காளம் பொருட்கள் வழங்கும் விழா


ஈரோடு மாவட்டம், சத்தியமங்க லம் ஊராட்சி  ஒன்றியம், கொமராபாளையம் ஊராட்சி க்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள, அங்கன்வாடி மையத்திற்கு கிரெடிட் அக்ஸஸ் கிராமின் லிமிடெட் நிறுவன சி எஸ்.ஆர் திட்டத்தின் (சமூக பங்களிப்பு) கீழ் ரூபாய் 25000/ மதிப்புள்ள 20 சிறுவர்கள் அமரும் பிளாஸ் டிக்சேர், பெரிய சேர்கள் 6, ஜமக்காளம்- 2 உட்பட குழந்தைகள் நலன்கருதி பொருட்கள் வழங்கும் விழா இந்திரா நகர் அங்கன்வாடி மையத்தில்,கிரெடிட் அக்ஸஸ் நிறுவன கோட்ட மேலாளர் மைதீன் முன்னிலை  யில், கொமாரபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.சரவணன் தலைமை யில் நடைபெற்றது. நிகழ்ச்சி யில் அங்கன்வாடி மேற்பார்வையாளர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் எஸ்.ரமேஷ்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கே.சுகுமார், எம்.வடிவேலு, நிறுவன உதவி மேலாளர் கார்த் திக், கிளை மேலாளர் ஜெயந்தன், ஊராட்சி வளர்ச்சிக்குழ உறுப்பினர் ராசு  (எ ) முனுசாமி ,ஊராட்சி செயலர் குமார் ஆகி யோர் பங்கேற்றனர். நிறைவாக அங்கன்வாடி மைய ஆசிரியர் தங்கமணி நன்றி கூறி னார். நிகழ்ச்சியில் அங்கன் வாடி மைய குழந்தைகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment