சாகச மன்னனுக்கு சோதனைக்கு மேல் சோதனை...... டிடிஎப் வாசனின் காவல் 4வது முறையாக நீட்டிப்பு...... - MAKKAL NERAM

Breaking

Monday, October 30, 2023

சாகச மன்னனுக்கு சோதனைக்கு மேல் சோதனை...... டிடிஎப் வாசனின் காவல் 4வது முறையாக நீட்டிப்பு......

 


பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை நவம்பர் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்படுத்தி தனக்குத்தானே காயம் ஏற்படுத்தி கொண்ட வழக்கில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 19ம்தேதி பாலுச்செட்டி சத்திரம் காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிஎஃப் வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 3 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டதோடு, ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.



இந்த நிலையில், டிடிஎஃப் வாசனை காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது அவரது நீதிமன்ற காவலை நவம்பர் 9ம் தேதி வரை நீட்டித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து 4வது முறையாக அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக பைக்கை இயக்கி விபத்தை ஏற்படுத்திய டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.

No comments:

Post a Comment