தனியார் பேருந்து டெப்போவில் தீ விபத்து.....வைரலாகும் வீடியோ...... - MAKKAL NERAM

Breaking

Monday, October 30, 2023

தனியார் பேருந்து டெப்போவில் தீ விபத்து.....வைரலாகும் வீடியோ......

 


கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வீரபத்ர நகரில், தனியார் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டெப்போவில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பேருந்துகள் மளமளவென தீப்பற்றி எரிந்தன. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.




இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் விண்ணை முட்டும் அளவுக்கு புகை சூழ்ந்துள்ளது. சுமார் 10 பேருந்துகள் தீயில் கருகி சாம்பலாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழப்பு அல்லது காயம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தீ விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


https://twitter.com/hashtag/Bengaluru?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1718899067051495493%7Ctwgr%5Ea5da1c3d17c539959f80d6ee6f8b9e623af86f17%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-2969087281083272872.ampproject.net%2F2310111731000%2Fframe.html&src=hashtag_click

No comments:

Post a Comment