வன உயிரின வார விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட வனத்துறை சார்பாக நடைபெற்ற விழாவில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு - MAKKAL NERAM

Breaking

Saturday, October 7, 2023

வன உயிரின வார விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட வனத்துறை சார்பாக நடைபெற்ற விழாவில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு


தமிழ்நாடு வனத்துறை மற்றும் கரூர் மாவட்ட கடவூர் தேவாங்கு வான உயிரின சரணாலயம் சார்பாக நடைபெற்ற விழாவில் கருவூர்  வன அலுவலர் வி.ஏ.சரவணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு வனங்களை காப்போம் உயிரினங்களை வளர்ப்போம் என்ற அடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, நடனம் இசை, கவிதை போட்டி. என பல்வேறு வகையான போட்டிகள் மாணவ மாணவியரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக நடைபெற்ற போட்டிகளில் மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தை வளர்க்கும் விதமாக கேடயங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


இவ்விழாவினை கரூர் மாவட்ட வன அலுவலர் பி.எ.சரவணன் மாணவ மாணவிகளுக்கு கூறியதாவது மனங்களை நாம் பாதுகாப்பதுடன் வன உயிரினங்களையும் நம் குடும்பத்தில் ஒருவராக கருதி பாதுகாக்க வேண்டும் எனவும் அத்துடன் வனங்களுக்கு அதிகமாக பயன்  தரும் வனத்தின் காப்பாளர் என்று அழைக்கப்படும் தேவங்கை நம் நாம் பாதுகாக்க வேண்டும் எனவும் தேவாங்கின் பயன்கள் குறித்து மக்களிடையே போதிய டெலிட் உணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் வனங்களில் தேவாங்கின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார்.

மாவட்ட அலுவலர் உயர் திரு வி.ஏ.சரவணன் எடுத்துரைத்த விதமும் மாணவ மாணவிகளை அவர் ஆற்றிய உரையும் மாணவ மாணவிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்ததை தொடர்ந்து மாணவ மாணவிகள் நாங்கள் இனி பணத்தையும் பண உயிரினங்களையும் பெரிதும் மதிப்பு பாதுகாப்போம் என உறுதி எடுத்துக் கொண்டனர்.


இந்நிகழ்வு பள்ளி மாணவ மாணவியருடைய இல்லாமல் பெற்றோர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அளித்ததுடன் தாங்களும் பணத்தையும் பண உயிரினங்களையும் காப்போம் என உறுதி போன்றனர்.


கரூர் மாவட்ட செய்தியாளர்,

மோகன்ராஜ்,

93857-82554.

No comments:

Post a Comment