ஓசூர் அருகே தமிழக எல்லை பகுதியான கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி பகுதியில் நேற்று மாலை நடந்த பட்டாசு கடை தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
அத்திப்பள்ளி பட்டாசு கடை தீவிபத்து சம்பவம் நடந்த இடத்தை கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து அத்திப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பட்டாசு கடை தீ விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்பது தெரிய வந்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். கடை நடத்த உரிய அனுமதி பெறப்பட்டிருந்ததா, விதி மீறி பட்டாசு விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வீதம் கர்நாடக அரசு சார்பில் வழங்கப்படும்’’ என்றார்.
No comments:
Post a Comment