பெட்ரோல் குண்டு சம்பவம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு - MAKKAL NERAM

Breaking

Thursday, October 26, 2023

பெட்ரோல் குண்டு சம்பவம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு

 


சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கிப் பிடித்தனர்.



அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடம் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர கவர்னர் ஒப்புதல் தராததால் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்தார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.



இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அவரது மாளிகையில் சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் சந்தித்தார். நேற்று நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க அவர் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஏற்கனவே இந்த சம்பவம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை பெருநகர காவல் துறை இணை ஆணையா் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி, துணை ஆணையா் ஆா்.பொன் காா்த்திக்குமாா் ஆகியோா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை சந்தித்து நேற்று விளக்கம் அளித்திருந்தனர். இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோரும் ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment