தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு அண்ணா பிறந்த நாள் முதல் விண்ணப்பித்திருந்து தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் கடந்த செப்டம்பர் 15 முதல் தமிழக அரசு செலுத்தி வருகிறது. விண்ணப்பித்தவர்களில் சிலருக்கு நிதி உதவி கிடைக்க வில்லை. அவ்வாறு தகுதியிருந்தும் கிடைக்காதவர்கள் கோட்டாட்சியருக்கு மேல் முறையீடு செய்யலாம் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதை தொடர் இதுவரை சாத்தூர் வருவாய் கோட்டத்தில் இது வரை 9951பெண்கள் மேல் முறையீடு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ள இளைஞர் அணி தலைவர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல் முறையீடு செய்துள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்து மேல் முறையீடு செய்துள்ள பெண் பயனாளர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார்.
உடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி மற்றும் மின்சார மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார், ஆகியோர் இருந்தனர்.
No comments:
Post a Comment