நாகையில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Monday, October 30, 2023

நாகையில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

 


நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு  ஓய்வு பெற்ற அலுவலக சங்க கட்டிடத்தில்  தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் நாகப்பட்டிணம் மாவட்ட கிளை சார்பில் நடத்திய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நுகர்வோர் பேரமைப்பின் காவலர் மனித உரிமை போராளி செ.பால் பர்ணபாஸ் அறிவுரையின் பேரில் குத்து விளக்கு ஏற்றி சிறப்பான முறையில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில தென் மண்டல செயலாளர் திரு.ஜெ. செல்வம் தலைமை வகித்தார்.தலைமை பொதுக்குழு உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான திருமதி பி.வெண்ணிலா  முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக பேரமைப்பின் மாநில துணை பொதுச் செயலாளரும் திருப்பூர் மாவட்ட தலைவருமான டாக்டர். சிந்து ஆர். சுப்பிரமணியம் சிறப்பு உரையாற்றினார்.வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் திரு. வெற்றிவேல் சாலை விதிகளை பற்றி எடுத்துரைத்தார்.

நாகப்பட்டிணம் மாவட்ட தலைவர், வெற்றிவேந்தன், மாவட்ட செயலாளர்  திரு. சேகர், மாவட்ட துணை செயலாளர் ஆர். பிரகாஷ் மாவட்ட பொருளாளர் திரு. பாலச்சந்திரன், அவர்தம் கருத்துகளை எடுத்துரைத்தனர்.மேலும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு  நிர்வாகிகள் சுமார் 100க்கும் மேற்பட்ட   உறுப்பினர்கள்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கலந்தாய்வுக் கூட்டம் இனிதே நிறைவுற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நாகை மாவட்ட நிருபர் க. சக்கரவர்த்தி புகைப்பட நிருபர் சுந்தரமூர்த்தி

No comments:

Post a Comment