தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தலைமை செயற்குழு கூட்டம் - இனாம் இயக்க செயற்குழு கூட்டம் - MAKKAL NERAM

Breaking

Monday, October 30, 2023

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தலைமை செயற்குழு கூட்டம் - இனாம் இயக்க செயற்குழு கூட்டம்


 ஈரோடு மாவட்டம் திண்டலில் உள்ள திண்டல் பஞ்சாபி அரங்கத்தில்‌ சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் நேதாஜி வரவேற்புரையாற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட 13 மாவட்ட விவசாயிகளுக்கு சட்டப்படியான உரிமையான 100 % சதவீதம் கருணைத்தொகையை பெறுவதற்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய விவசாயிகளை ஒருங்கிணைத்து வழக்கு தாக்கல் செய்வது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


 இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தென் மாநில விவசாயிகளை ஒருங்கிணைத்து சட்ட போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.அதன் பின்பு நடைபெற்ற இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு - மனை உரிமையாளர்கள் இயக்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இயக்கத்தின் மாநில  இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த கருணாமூர்த்தி , மாநில ஒருங்கிணைப்பாளர் வேலு மந்திராச்சலம்  முன்மொழிவின் பெயரில் மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  அதன்பின் 14 மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்புக்கள் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.


 பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களின் பட்டியலை திரட்டி, மாநில முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி, விவசாயிகள், பொதுமக்களின் நில உரிமையை காப்பாற்றுவதற்கு இயங்குவதற்கான அணுகுமுறைகள் கூட்டத்தில் விரிவாக  ஆலோசிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.


சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி  இனாம் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறையும், வக்பு வாரியமும் எவ்வாறு அபகரிக்கிறது என்று விரிவாக உரையாற்றினார்.


சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முத்து விசுவநாதன்  இனாம் இயக்க  இணை ஒருங்கிணைப்பாளர்களை அறிவிப்பு செய்து பொறுப்புகளை ஒப்படைத்தார்.பின்பு இனாம் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி  ஏற்புரையாற்றினார்.


மதிய உணவுக்குப் பின்பு நடைபெற்ற கூட்டத்தில் தென்னை விவசாயிகள் அணியின் மாநில செயலாளராக வேலு மந்திராச்சலம்  பொறுப்பேற்றுக் கொண்டார், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மலைவாழ் விவசாயிகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழக மலைவாழ் மக்கள் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்கிற பழங்குடியினர் அமைப்பு துவங்கப்பட்டது, அதன் ஒருங்கிணைப்பாளராக வால்பாறை ரஞ்சித்  பொறுப்பேற்றுக் கொண்டார், அவருக்கு சங்கத்தின் மாநில தலைவர் இரா. சண்முகசுந்தரம் பச்சை துண்டு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.


 கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக எழில் நடராஜன் , திருவாரூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக விக்னேஷ், திருவாரூர் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக சங்கத்தின் கலை இலக்கிய அணி மாநில செயலாளர் எழுத்தாளர் சக்தி , திருப்பூர் வடக்கு மாவட்ட அவை தலைவராக பெருமாநல்லூர் முத்து , மாவட்ட செயலாளராக அத்திக்கடவு நவீன்,  தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக கந்தவேல் , கோவை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக அன்னூர் முத்து , கோவை கிழக்கு மாவட்ட செயலாளராக பஞ்சலிங்கம் , மாவட்ட துணைச் செயலாளராக ஆனந்த்  பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.உழவன் கலை குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளராக கும்மி செந்தில்  பொறுப்பேற்றுக் கொண்டார்.


திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ஆக சீனிவாசன் , மாவட்ட அவைத் தலைவராக ஏ. எஸ். கிருஷ்ணன் , மாவட்ட இளைஞரணி செயலாளராக மணிகண்டன் , மாவட்ட துணைச் செயலாளராக ராஜேந்திரன்  பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.


 திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக குணசேகரன்  பொறுப்பேற்றுக் கொண்டார் இவர்களுக்கு சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் நேதாஜி , துணைப் பொதுச் செயலாளர் ஏழுமலை  பச்சைத் துண்டு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.


விழுப்புரம் கிழக்கு மாவட்ட அவை தலைவராக உலகநாதன் , விழுப்புரம் வடக்கு மாவட்ட இனாம் இயக்க செயலாளராக செரீப்  பொறுப்பேற்றுக் கொண்டார்கள்  சங்கத்தின் மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் நாகை தமிழ் செல்வன் பச்சை துண்டு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.


அதனையடுத்து நடந்த சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டத்தில் வருகிற நவம்பர் - டிசம்பர் மாதங்களில் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கையும், ஆண்டு சந்தா சேகரிக்கும் பணியையும், நன்கொடை சேகரிக்கும் பணியையும், ஒன்றியம் தோறும் குழு அமைத்து செய்வது எனவும், தற்போது உள்ள 20 மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஐந்தாயிரம் விவசாயிகள் விதம் ஒரு லட்சம் விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்ப்பது எனவும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை வலிமை வாய்ந்த இயக்கமாக உருவாக்குவதற்கு அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளும் இணைந்து மிகச் சிறப்பாக பணி செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

சங்கத்தின் மாநில, மாவட்ட, நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை, ஆண்டு சந்தா சேகரிப்பு, நன்கொடை சேகரிப்பு குறித்து மிகச் சிறப்பாக ஆலோசனை வழங்கினார்கள். அவை அனைத்தும் இறுதி படுத்தப்பட்டு விரைவில் வழிகாட்டுதல்களாக வெளியிடப்பட உள்ளது.


இன்றைய தலைமை செயற்குழு கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொருளாளர் ரமேஷ் சிவக்குமார் , சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் மற்றும் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 22 மாவட்டங்களில் இருந்து 150 க்கு மேற்பட்ட தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இறுதியாக ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம்  நன்றியுரையாற்ற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.


 மக்கள் நேரம் இணைய தளம்  செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி- 9965162471.

No comments:

Post a Comment