கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்த 12 வயது சிறுவனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநில தலைமை செயலகத்துக்கு நேற்று போன் அழைப்பில் பேசிய சிறுவன் ஒருவர், முதலமைச்சர் பினராயி விஜயன் குறித்து அவதூறு கருத்துகளைக் கூறியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தனர். இதன் பேரில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் கொச்சியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் இந்த மிரட்டல் அழைப்பை செய்திருந்ததை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வரும் போலீஸார், அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment