கரூர் அருகே சிட்பண்ட் நிறுவனத்தின் மீது அவதூறு...... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்..... - MAKKAL NERAM

Breaking

Thursday, November 2, 2023

கரூர் அருகே சிட்பண்ட் நிறுவனத்தின் மீது அவதூறு...... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.....


கரூரில் கடவூர் அருகே உள்ள தரகம்பட்டி கரூர் சிவம் சிட்பண்டு நிறுவனத்தின் பெயரில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.


இது தொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவம் சிட்பண்ட் நிறுவனத்தின் வழக்கறிஞர் அரசு , கரூர் மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டு சிறப்பாக ஏலச்சீட்டு நடத்தி வரும் நிறுவனம் கரூர் சிவம் சிட்பண்ட் பிரைவேட் லிமிடெட் மீது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிதி நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், முள்ளிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சேர்வைக்காரன்பட்டி டேனியல் பிரசாத் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் தர்மராஜ் ஆகியோர் மூன்று பேர்,  5 லட்ச ரூபாய் சீட்டு திட்டத்தில், சேர்ந்து 9 மாதங்கள் தவறிய தவணைத் தொகையை முறையாக செலுத்தாமல், சீட்டு எடுக்க முயன்ற போது, நிறுவனத்தினர் மறுக்கவே, சீட்டு தர மறுத்ததால், நிறுவனத்தின் பெயரை எடுக்கும் நோக்கில் அவதூறு பரப்பும் வகையில் பொய் புகாரினை, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்திருப்பதாக தெரிவித்தனர் .


 இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஒரு வார காலமாக நிதி நிறுவனம் குறித்து அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நிதி நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எந்த நிதி சேவை குறைபாடும் இன்றி அரசு விதிமுறைகள் படி, முறையாக பதிவு செய்து சேவை வழங்கி வருவதாக தெரிவித்தார்.


கரூர் மாவட்ட செய்தியாளர் எம்.எஸ்.மோகன்ராஜ்

93857-82554

No comments:

Post a Comment