ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் நகராட்சி மற்றும் அரியப்பம்பாளையம் பேரூராட்சி , கோணமூலை ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் காவல் துறையினர் ஒத்துழைப்போடு சத்தியமங்கலத்தின் பவானி ஆற்றுக்கு தெற்கு பகுதியில் சுமார் 150 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியானது சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட பணியினை சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும் , சத்தி திமுக நகர கழக செயலாளர் ஆர். ஜானகிராமசாமி மேற்பார்வையிட்டார்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி .
No comments:
Post a Comment