நாகையில் ஜாக்டோ-ஜியோ சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் - MAKKAL NERAM

Breaking

Thursday, November 2, 2023

நாகையில் ஜாக்டோ-ஜியோ சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்


நாகப்பட்டினம் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அருகில் அவுரித்திடலில் ஜாக்டோ-ஜியோ சார்பில்,  கொட்டும் மழையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அ.தி.அன்பழகன் ( தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்) கு.சரவணன் ( உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்), பா. இரவி ( தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்) மற்றும் சி.முத்துசாமி ( தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி) ஆகியோர் தலைமையில் முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்திட மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் புயல் குமார் ( தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), சு.இரமேஷ் ( தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ), பால சண்முகம் ( தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), இரா.அரசுமணி ( பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு), ஞானசேகரன் ( மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம்), குமார் ( முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்), பிரசன்னா பாபு ( உடற்கல்வி ஆசிரியர் கழகம்), வெற்றி வேலன் ( தமிழக தமிழாசிரியர் கழகம்), கணேசன் ( நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம்), ஜெ.ஜம்ருத்நிஷா ( ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம்), அருளேந்திரன் ( சத்துணவு ஊழியர் சங்கம்), ரவிச்சந்திரன் ( நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம்), மனோகரன ( வனத்துறை ஊழியர் சங்கம்), செந்தில்குமார் ( தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி),  பாலசுப்ரமணியன் ( நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர் சங்கம்), இராஜவேல் ( கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம்) உள்ளிட்ட பல்வேறு சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். 

ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவின்படி, புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் , சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், 2002 முதல் 2004 தொகுப்புஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பணிக்காலத்தை வரண்முறைசெய்திட வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத  பணி நீக்க காலத்தை பணிகாலமாக வரைமுறைப்படுத்த வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 


நாகை மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி.க


புகைப்பட நிருபர் சுந்தரமூர்த்தி

No comments:

Post a Comment