தொட்டம்பாளையம் பகுதியில் அஇஅதிமுக வின் பொன்விழா 52ஆம் ஆண்டு கொடியேற்று விழா - MAKKAL NERAM

Breaking

Thursday, November 2, 2023

தொட்டம்பாளையம் பகுதியில் அஇஅதிமுக வின் பொன்விழா 52ஆம் ஆண்டு கொடியேற்று விழா


ஈரோடு மாவட்டம் ,  பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி அஇஅதிமுக  சார்பாக பவானிசாகர் வடக்கு ஒன்றியம் தொட்டம்பாளையம் பகுதியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்  அ.பண்ணாரி  தலைமையில்  கொடியேற்று விழா நடைபெற்றது. 



இந்த நிகழ்ச்சியில் பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ. பழனிச்சாமி , பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் டி.எஸ்.பழனிச்சாமி , பவானிசாகர் ஒன்றிய எம் ஜி ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் எம்.ரவி , தலைமை கழக பேச்சாளர் எம். பி.துரைசாமி , மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் வி.பி.தமிழ்செல்வி , தொட்டம்பாளையம் கிளை செயலாளர் எம்.சுப்பிரமணி , ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.நாராயணசாமி , ஒன்றிய மகளிர் அணி செயலாளர் வசந்தாமணி , பவானிசாகர் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பிரசாந்த் பழனிச்சாமி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் நெசவாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் முன்னாள் இயக்குனர்கள் ,  அஇஅதிமுக  சார்பு அமைப்பின் முன்னோடிகள்  மற்றும் தொட்டம்பாளையத்தில் கிளை கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 



மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment