புலி தாக்கியதில் மூதாட்டி பலி - MAKKAL NERAM

Breaking

Thursday, November 2, 2023

புலி தாக்கியதில் மூதாட்டி பலி

 


மராட்டிய மாநிலம், சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரி வனப்பகுதியில் புலி தாக்கியதில் 60 வயது மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



பிரம்மபுரி வனப் பிரிவின் தெற்கு வன எல்லைக்கு உட்பட்ட ஹல்டா கிராமத்தில் நேற்று மதியம் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; மூதாட்டி, தனது பண்ணைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, புதர்களுக்குள் பதுங்கியிருந்த புலி, திடீரென அவரை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.



இதன் பின், மூதாட்டியின் உடலை சுமார் 100 மீட்டர் வரை புலி இழுத்துச் சென்றது. அப்போது, அருகில் உள்ள பண்ணையில் பணிபுரியும் சிலர் அபாய ஒலி எழுப்பியுள்ளனர். அதைத் தொடர்ந்து புலி அந்த இடத்தை விட்டு ஓடியது. மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிரம்மபுரியில் உள்ள கிராமப்புற மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment