ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இண்டியம்பாளையம் ஊராட்சியில் அரசூர்புதூர், திருமலைநகர், செல்வி காடு அருகில் உள்ள கரடு ஆகிய பகுதிகளில் ஊராட்சி 15-வது நிதிக்குழு மானியத்தில் இருந்து ரூ.4.20 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் தளம் மற்றும் கழிவுநீர் வடிகால் கல்வெட்டு அமைத்தல் ஆகிய பணிகளுக்கு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.சி.பி. இளங்கோ பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இண்டியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.செந்தில் , ஊராட்சி மன்ற துணை தலைவர் உமாமகேஷ்வரி, மாக்கினாங்கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் அம்முஈஸ்வரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ரத்தினம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராஜம்மாள் , முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் விஸ்வநாதன் , ஒன்றிய துணை செயலாளர் டி.பி. அசோகன், கோண மூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் (எ) பா.செந்தில்நாதன் , கிளைகழக செயலாளர்கள், தங்கவேல், முருகேசன், சாமிநாதன், மூர்த்தி , திமுக உறுப்பினர்கள் அரவிந்த் , ஜீவா பெருமாள், செல்வராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment