செண்பகபுதூர் ஊராட்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும்,திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக செண்பகப் புதூர் ஊராட்சியில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.சி.பி. இளங்கோ இனிப்புகள், மற்றும் அன்னதானம் வழங்கினார் . மேலும் இவ்விழாவில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வி.என். சின்னசாமி, (சிஎம்எஸ் ) தலைவர் வி.சி.வரதராஜ் , செண்பகபுதூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவக்குமார், உக்கரம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கே.பி.சம்பத்குமார், கோண மூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் (எ) பா.செந்தில்நாதன் , இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ்குமார், மாணவர் அணி அமைப்பாளர் சஞ்சீவ் குமார், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், செண்பகபுதூர் ஊராட்சி கிளை செயலாளர்கள் சதாசிவம். பொன்னுச்சாமி, ராஜ்குமார், சிவராஜ், ராஜசேகர், பிரக்னேஷ். சதீஷ்குமார். சேரன் ராஜ். சின்னச்சாமி ரகு, மற்றும் திமுக நிர்வாகிகள் , ஊர் பொதுமக்கள். கலந்துகொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments