இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 30- ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யுமென வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment