தெலுங்கானா தேர்தலில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தோல்வி முகம்....
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து வருகிறார். குறிப்பாக கம்மாரெட்டி தொகுதியில் அவர் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் ஒரே கட்டமாக மொத்தமுள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 30-ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 71 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் குறைந்தது 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் தான் இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. தெலங்கானாவில் தற்போது பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகராவ் உள்ளார். தெலங்கானாவில் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி இடையே நான்கு முனை போட்டி உள்ளது.
தெலங்கானா முதல்வராக உள்ளார் சந்திரசேகர் ராவ் மொத்தம் 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். கஜ்வெல் மற்றும் காமரெட்டி தொகுதிகளில் அவர் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான் காலை 8 மணிக்கு தபால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2 தொகுதிகளிலும் சந்திசேகர் ராவ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
குறிப்பாக காமரெட்டி தொகுதியில் அவர் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் சந்திரேகர ராவை எதிர்த்து காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டியிட்டுள்ளார். இதேபோல கஜ்வெல் தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் எட்டலா ராஜேந்தர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக களமிறங்கி உள்ளார். இதனால் இரண்டு தொகுதிகளிலும் சந்திரேகர ராவ் பின்னடவை சந்தித்துள்ளது அக்கட்சி தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments