நாங்குநேரி அருகே ஓடையோரத்தில் குவியல் குவியலாக, விநியோகிக்கப்படாத தபால்கள் - MAKKAL NERAM

Breaking

Sunday, December 24, 2023

நாங்குநேரி அருகே ஓடையோரத்தில் குவியல் குவியலாக, விநியோகிக்கப்படாத தபால்கள்

 


நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே அரியகுளம் கிராமத்தில் உள்ள குளம் நிரம்பியதால், உபரி நீர் கால்வாய் வழியாக வெளியேறுகிறது. இதனால் அங்குள்ள சாலை சேதமடைந்துள்ளது. இதையடுத்து சாலையை சரிசெய்யும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓடையோரத்தில் குவியல் குவியலாக, விநியோகிக்கப்படாத தபால்கள் கிடப்பதைக் கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


அதில், பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய ஆதார் அட்டை, எல்.ஐ.சி, வங்கி, அரசுத்துறை மற்றும் தனிநபர் கடிதங்கள் உட்பட முக்கிய ஆவணங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தண்ணீரில் சேதமடையாமல் கிடந்த ஆதார் அட்டைகளை மீட்ட கிராம மக்கள், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment