இந்தி பேசும் மக்கள் எங்களுக்காக கழிப்பறைகளையும், சாலைகளையும் சுத்தம் செய்கிறார்கள் என்று திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பாஜகவினரால் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. தயாநிதி மாறனின் பேச்சு மீண்டும் வடக்கு - தெற்கு விவாதத்திற்கு விறுவிறுப்பு அளித்துள்ளது என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா தெரிவித்திருந்தார்.
தயாநிதி மாறனின் இந்த பேச்சு வைரலாகி இந்தியா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தயாநிதி மாறனின் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’இது கண்டிக்கத்தக்கது. மற்ற மாநில தலைவர்கள், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், இதுபோன்ற கருத்துகளை கூறுவதை தவிர்க்க வேண்டும். இந்த நாடு ஒன்று தான். மற்ற மாநில மக்களை மதிக்கிறோம், அதையே எதிர்பார்க்கிறோம். இதுபோன்ற கருத்துகளை கூறக்கூடாது. அதுவும் சமூக நீதி பேசும் திமுகவில் இருந்துகொண்டு இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது’’ என கூறினார்.
No comments:
Post a Comment