ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை....... கவலையுடன் கரை திரும்பிய மீனவர்கள்..... - MAKKAL NERAM

Breaking

Sunday, December 24, 2023

ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை....... கவலையுடன் கரை திரும்பிய மீனவர்கள்.....

 


ராமேசுவரத்தில் இருந்து 8 நாட்களுக்கு பிறகு 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்தபோது, 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்துள்ளனர்.


மேலும் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் வலைகளை இலங்கை கடற்படையினர் வெட்டி சேதப்படுத்தியதாக மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயல்களால் ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் பாதியிலேயே கவலையுடன் கரை திரும்பினர். படகு ஒன்றிற்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment