• Breaking News

    டெல்லியில் கடும் பனிமூட்டம்...... பல விமானங்கள் ரத்து......

     


    நாட்டின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலையில் முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை போட்டபடியே வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர். அதேவேளை, பனிமூட்டம் அதிகரித்துள்ளபோதும் டெல்லியில் காற்றின் தரம் சற்று அதிகரித்துள்ளது.


    இந்நிலையில், கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஓடுதளம் தெரியாதவகையில் பனிமூட்டம் இருப்பதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு விமானங்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    No comments