சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அமைச்சர் சேகர்பாபு - MAKKAL NERAM

Breaking

Sunday, December 31, 2023

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அமைச்சர் சேகர்பாபு

 


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கடந்த 26-ம் தேதி தேரோட்டமும், 27-ம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற்றது.


ஆருத்ரா தரிசனத்தின்போது கோவிலில் உள்ள கனகசபை மீது பக்தர்களை ஏறவிடாமல் கோவில் தீட்சிதர்கள் தடுத்தனர். கோவில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமிதரிசனம் செய்ய ஐகோர்ட்டு அனுமதியளித்துள்ளபோதும் பக்தர்களை கனகசபை மீது ஏறவிடாமல் தீட்சிதர்கள் தடுத்தனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்நிலையில், கனகசபை மீது பக்தர்களை ஏறவிடாமல் தடுத்த தீட்சிதர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment