தூத்துக்குடிக்கு வழக்கம் போல் ரெயில்கள் இயங்கும்...... - MAKKAL NERAM

Breaking

Friday, December 22, 2023

தூத்துக்குடிக்கு வழக்கம் போல் ரெயில்கள் இயங்கும்......

 


வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 14-ந்தேதியில் இருந்து அந்த பகுதிகளில் மிதமான மழையாக ஆரம்பித்து, 2 தினங்கள் கனமழை வெளுத்து வாங்கியது.


4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டது . இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்ததால் ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது மழை ஓய்ந்த பின்னர் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது.



இதன் காரணமாக தூத்துக்குடிக்கு செல்லும் ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுள்ளது. அதன்படி நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை தூத்துக்குடி சென்றடைந்தது. எனவே இந்த ரெயிலானது இன்றும் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்படுள்ளது.


மேலும் திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்செந்தூர்-எழும்பூர் விரைவு ரெயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்படும். மேலும் திருச்செந்தூர்-பாலக்காடு செல்லும் ரெயில் மதியம் 1.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment