அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு செய்ததால் வன்மத்தினை கக்கிய ஜெயா டி.வி..... பாரத முன்னேற்றக் கழகம் கடும் கண்டனம்...... - MAKKAL NERAM

Breaking

Friday, December 22, 2023

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு செய்ததால் வன்மத்தினை கக்கிய ஜெயா டி.வி..... பாரத முன்னேற்றக் கழகம் கடும் கண்டனம்......



தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.எஸ்.ராஜகண்ணபன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறை வழங்கப்பட்டது. இது குறித்து பாரத முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பாரதராஜா யாதவ் மற்றும் பொதுச்செயலாளர் உ.ஆறுமுகசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்.....

பாரதராஜா யாதவ்

மாண்புமிகு அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் என்றும்  முதலமைச்சர் மீதும்,தமிழக  அரசின் மீதும் கொண்ட அளப்பறிய விசுவாசத்தின் காரணமாக மட்டுமல்ல, சிறந்த நிர்வாகத் திறமை உடையவர் என்ற காரணத்தினாலும் தான் இந்த உயர்கல்வித்துறை கூடுதலாக வழங்கப்பட்டுளது என்பதே நிதர்சனமான உண்மை.மாண்புமிகு முதலமைச்சருக்கு இந்தநேரத்தில் நன்றியை தெரிவிக்கின்றோம்.

உ.ஆறுமுகசாமி

அதே நேரம் உதிரி கட்சிக்கு சொந்தமான ஜெயா டி.வி.யினருக்கு  மாண்புமிகு அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்களுக்கு கூடுதல் இலாகா கொடுக்கப்படுள்ளது கடும் வயர்றெரிச்சலை கிளப்பியுள்ளது போல ஜெயா டி.வி.யின் நேற்றைய தனிச்செய்தியில் மாண்புமிகு அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதற்கு பாரத முன்னேற்றக் கழகம் சார்பாகவும்,ஒட்டு மொத்த யாதவ சமுதாயத்தின் சார்பாகவும் கடும் கண்டனத்தினை தெரிவிக்கின்றோம்.

அந்த செய்தியில் அடிக்கடி  தென் மாவட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பனுக்கு சொந்த செல்வாக்கு உள்ளது என்பதனை ஒப்புக்கொண்ட ஜெயா டிவியினரே இறுதியில் அவருக்கு தமிழக அரசு கூடுதல் இலாகா கொடுத்தற்காக அவதூறு பரப்ப முனைந்ததில் இருந்தே ஜெயா டி.வி.தமது.உச்சபட்ச வன்மத்தினை கக்கியுள்ளது என்பது  தெளிவாக தெரிகின்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜெயா டி.வி.யினரே ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ளுங்கள்.,,மாண்புமிகு அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் இருக்குமிடம் உண்மை இருக்கும், விசுவாசம் இருக்கும் திறமையும் அசாத்தியமாக இருக்கும் முப்பெருந்துறையை சிறப்பாக வழி  நடத்தியவர் நிச்சயமாக உயர்கல்வித்துறையையும் உயர்ந்த எல்லைக்கு கொண்டு செல்வார் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன்

பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு தனது அறிக்கையில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment