எட்டயபுரம் - விளாத்திகுளம்- தூத்துக்குடி – மதுரை நான்கு வழிச்சாலையில் 100க்கு மேலான விபத்துக்கள் நடந்துள்ளது. இன்னும் தொடர்ச்சியாக விபத்து நடக்கவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே எட்டயபுரம் - விளாத்திகுளம்- தூத்துக்குடி – மதுரை நான்கு வழிச்சாலையில் போர்க்கால அடிப்படையில் மேம்பாலம் அமைக்க தாங்கள் நடவடிக்கை எடுக்குமாறு புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கட்சியின் மாவட்ட செயலாளர் மு.லெனின் தலைமையில், கோட்டாட்சியர் நேரடி உதவியாளர் நிஷாந்தினி அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
இதில் மாவட்ட தலைவர் அருள்ராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கனகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் தாவீது, புதூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமாhர், கோவில்பட்டி இளைஞர் அணி பொறுப்பாளர் சண்முகநாதன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment