இந்திய அளவில் ட்ரெண்டிங் 'தமிழக வெற்றி கழகம்' - MAKKAL NERAM

Breaking

Friday, February 2, 2024

இந்திய அளவில் ட்ரெண்டிங் 'தமிழக வெற்றி கழகம்'

 


நடிகர் விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில் இன்றைய தினம் பதில் கிடைத்து விட்டது. டெல்லி சென்று இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்து விட்டு, அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.


நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும் அவர் மூன்று பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியல் என்பது தொழில் அல்ல அது மக்களுக்கு செய்யும் சேவை என்றும் கூறியுள்ளார்.


இந்த நிலையில் விஜய் தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்த ஒரு சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் குறிப்பாக டுவிட்டர் இணையதளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது என்பதும் ஆயிரக்கணக்கான டுவிட்டுக்கள் இதுகுறித்து பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் ரசிகர்கள் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியானவுடன் மாஸ் காட்டி வருகிறார்கள்.

No comments:

Post a Comment