பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார் - MAKKAL NERAM

Breaking

Friday, February 2, 2024

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார்

 


பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே (வயது 32). மாடலிங் துறையில் பிரபலமான இவர் நிஷா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி இந்தி, கன்னடா, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.


2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி சர்ச்சைக்குள் சிக்கினார். இவர் கடந்த 2020ம் ஆண்டு தன் காதலன் சாம் பாம்பெயை திருமணம் செய்துகொண்டார்.


இதனிடையே, பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் சிகிச்சை பெற்றுவந்தார்.


இந்நிலையில், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பூனம் பாண்டே இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகை பூனம் பாண்டே மரணமடைந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment