நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் உணவு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய பயிற்சி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திருமருகல் வட்டாரத்திற்கு உட்பட்ட சமுதாய வள பயிற்றுநருக்கான உணவு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த மூன்று நாட்கள் 05.02.2024 முதல் 07.02.2024 வரை பயிற்சி திருமருகல் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் முருகேசன் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார்.
உதவி திட்ட அலுவலர் இந்திராணி முன்னிலை வகித்தார் வட்டார இயக்க மேலாளர் அறிவு நிதி வரவேற்று பேசினார் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுனர் ஸ்ரீரங்கபாணி பயிற்சியில் உணவு, ஊட்டச்சத்து,ஆரோக்கியம் ,மற்றும் சுகாதாரம் வாழ்வாதாரத்திற்கான இணைப்பு , ஊட்டச்சத்து குறைபாடு சுழற்சி மற்றும் 1000 நாட்கள் பராமரிப்பு முறை, தாய் வழி ஊட்டச்சத்து,தாய்ப்பால் மற்றும் இணை உணவு,பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு மற்றும் பிரசவத்திற்கு பிறகு பராமரிப்பு,ரத்த சோகை,ஊட்டச்சத்து தோட்டம் பற்றிய மூன்று நாட்கள்பயிற்சி வழங்கப்படுகிறது இந்த பயிற்சி ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது இப்பயிற்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் இந்துஜா,கார்த்திகா,சுபஸ்ரீ,அமுதா,வட்டார வள பயிற்றுநர்கள் திவ்யா உதயகுமாரி உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்ட நிருபர் க.சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு 9788341834
No comments:
Post a Comment