தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் கிராமப்புற வேளாண்மை வானிலை சேவை திட்டத்தின் கீழ் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப வேளாண்மை மற்றும் கைபேசி செயல்களின் பயன்பாடு பயிற்சி கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது .
கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் மற்றும் தலைவர் பாக்யாத்து சாலிகா தலைமையில் இக்கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தற்போது நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்தும் அதற்கு ஏற்ப பயிரிடுவது குறித்தும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர் .
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி எட்டையாபுரம் கயத்தார் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment