பழனி முருகன் கோவிலில் கெட்டுப்போன பிரசாதங்கள்...... உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு...... - MAKKAL NERAM

Breaking

Friday, February 9, 2024

பழனி முருகன் கோவிலில் கெட்டுப்போன பிரசாதங்கள்...... உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு......

 


அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், பழனி முருகன் கோவிலில் கெட்டுப் போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாக பக்தர்கள் குற்றச்சாட்டினர். பழனி கோவிலில் வழங்கப்பட்ட லட்டு, அதிரசம் உள்ளிட்டவை கெட்டுப்போய் சாப்பிட முடியாதபடி இருந்ததாக புகார் எழுந்தது.


புகார் எழுந்ததையொட்டி, பஞ்சாமிர்தம் தயாரிக்கும் நிலையங்களில் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். மேலும், பஞ்சாமிர்தம், லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை சோதனை செய்வதற்காக அதிகாரிகள், ஆய்வகத்திற்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment