புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அறிவுறுத்தலின்படி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-1 இன் சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர்( பொ) பாலமுருகன் தலைமை தாங்கி, கொத்தடிமை தொழிலாளர்களின் அவல நிலை குறித்தும், அவர்தம் பிரச்சனைகளை களைவதற்கு நம் அரசு எடுத்து வருகிற முயற்சிகள் குறித்தும் மாணவர்களிடையே எடுத்துரைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பழனித்துரை உறுதிமொழியை வாசிக்க கல்லூரி மாணவ மாணவியர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் கூடி நின்று உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
No comments:
Post a Comment