புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 3 திறன்மிகு வகுப்பறைகள் திறப்பு விழா கல்லூரி முதல்வர் குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் பயின்ற முன்னாள் மாணவர்களின் பங்களிப்பில் அறைகுளிரூட்டி, இன்வெர்ட்டர், ஸ்மார்ட்போர்டு ஆகியவைகளை வழங்கப்பட்டன. இதில் வணிகவியல் துறை தலைவர் பாஸ்கரன், பச்சலூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி, பள்ளத்திவயல் ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன், கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment