பொன்னமராவதி அருகே சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஆறாமாண்டு ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Saturday, February 24, 2024

பொன்னமராவதி அருகே சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஆறாமாண்டு ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஆறாமாண்டு ஆண்டு விழா:மாணவ,மாணவிகள் உற்சாக நடனம். சாத்தனூர் மின்னொலி கலையரங்கில் நடைபெற்ற ஆறாமாண்டு ஆண்டு விழாவிற்கு கூடுதல் வட்டார கல்வி அலுவலர் இலாஹி ஜான்,வட்டாரக் கல்வி அலுவலர் ராமதிலகம், தலைமையாசிரியர் மஞ்சுளா ஆகியோர் தலைமை தாங்கினார்.

 வட்டார வள மேற்பார்வையாளர் ( பொறுப்பு ) சிவக்குமார் முன்னிலை வகித்தார்.மேலாண்மைக்குழு தலைவர் புவனேஸ்வரி, தலைமையாசிரியர் மஞ்சுளா ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர்.இடைநிலை ஆசிரியர் வள்ளிக்கண்ணு ஆண்டறிக்கையை வாசித்தார்.அரசமலை ஊராட்சி மன்றத்தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் டாக்டர் அப்துல் சலாம்,அரசமலை ஊராட்சி செயலர் ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் முறையாக தொடங்கிய ஆண்டு விழாவில் பரத நாட்டியம், மாணவ, மாணவிகளின் நடனம், பாட்டு மன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை ஆசிரியர் தலைமையாசிரியர் மஞ்சுளா  தொகுத்து வழங்கினார்.முன்னதாக நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவச்செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாணவ,மாணவிகளில் நடன அமைப்புகளை சமூக ஆர்வலர் செல்வி விஜயலட்சுமி ஒருங்கிணைத்தார். இப்பள்ளி ஆண்டு விழாவினை அப்பள்ளி ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு செய்தனர். இந்நிகழ்வில் சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப்பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள்,இல்லம் தேடி தன்னார்வலர்கள், முன்னாள் இந்நாள் புரவலர்கள்,முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்டு சிறப்பித்த அனைவரும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் புவனேஸ்வரி நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


இரா.பாஸ்கர் செய்தியாளர்


No comments:

Post a Comment