அதிமுகவுக்கு டாடா காட்டிய பாமக...... மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி...... - MAKKAL NERAM

Breaking

Monday, March 18, 2024

அதிமுகவுக்கு டாடா காட்டிய பாமக...... மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி......

 

பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியென பாமக அறிவித்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டி என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் அறிவித்துள்ளார். பாமக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 2 நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. சேலத்தில் நாளை நடைபெறும் பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment