நாகை:வடவூர் அரசு தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா - MAKKAL NERAM

Breaking

Sunday, April 7, 2024

நாகை:வடவூர் அரசு தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா

 

நாகை ஒன்றியம் வடவூர் அரசு தொடக்கப்பள்ளியில்  ஆண்டுவிழா, விளையாட்டு விழா மற்றும் பணி நிறைவெய்தும் ஆசிரியருக்கு பாராட்டுவிழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு.  தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மு.லெட்சுமிநாராயணன் தலைமை ஏற்க வட்டாரக்கல்வி அலுவலர் க . இளங்கோவன்  நீலமேகம் ஏ.பி.ஒ. முன்னிலை வகித்தனர்.

விழாவின் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் க .இராஜேந்திரன் ,வடவூர் ஊராட்சி மன்ற தலைவர் ந மனோகரன்  முன்னாள் எஸ்.எம்.சி கல்வியாளர் ப. உதயகுமார்  த தொ ப ப ஆ கூட்டணி மாநில பொது குழு உறுப்பினர் இரா முத்துகிருஷ்ணன் மா க குழு உறுப்பினர் இரா பாலு   கோ. சிவகுமார் வட்டார செயலர்  தனுசுமணி மற்றும் பல்வேறு  பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்  கலந்துகொண்டு பணி நிறைவு பெறும் ஆசிரியர் மு விஸ்வநாதனை பாராட்டி சிறப்பித்தனர்  முன்னதாக வருகை தந்த அனைவரையும்  தலைமைஆசிரியர் செ. அந்தோணியம்மாள்  வரவேற்றார்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மாணவர்கள் கலைநிகழ்ச்சி மேலும்  விழாவிற்கு சிறப்பு சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து செய்தியாளர் சக்கரவர்த்தி.க

விளம்பர தொடர்புக்கு

9788341834



No comments:

Post a Comment