கடல் கொந்தளிப்பு...... தமிழக மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை....... - MAKKAL NERAM

Breaking

Sunday, May 5, 2024

கடல் கொந்தளிப்பு...... தமிழக மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.......

 

தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும், பொதுமக்கள் கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 45 முதல் 65 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் கடலுக்குச் செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment