சங்கரன்கோவில் அருகே கூட்டுறவு சங்க தலைவர் குடிபோதையில் பாலத்திலிருந்து தவறி விழுந்து பலி - MAKKAL NERAM

Breaking

Wednesday, May 22, 2024

சங்கரன்கோவில் அருகே கூட்டுறவு சங்க தலைவர் குடிபோதையில் பாலத்திலிருந்து தவறி விழுந்து பலி

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கள்ளிகுளத்தை சேர்ந்த விவசாயி வெங்கடசாமி நாயக்கர் இவர் அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் இவர் கடந்த சில தினங்களா குடி போதைக்கு அடிமையாகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை கழுகுமலை சங்கரன்கோவில் சாலையில் கள்ளிக்குளம் அருகே பாலத்தின் மேல் அமர்ந்து அளவுக்கு அதிகமாக குடித்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் பாலத்தின் மேல் இருந்து தவறி முட்பதற்குள் விழுந்துள்ளார் இச்சம்பவத்தில் அந்த இடத்திலேயே பலியானார்  இதுகுறித்து இன்று காலை குருவிகுளம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடசாமி நாயக்கர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்

No comments:

Post a Comment