அந்தமானில் முதல்முறையாக நடைபெற்ற சிலம்ப போட்டியில் யுத்த வர்மா சிலம்ப போர் கலை அகடாமி விளையாட்டு சங்கம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
தமிழகத்தின் பாரம்பரிய கலையான சிலம்பம் தற்போது உலக பிரசித்தி பெற்றுஉள்ளது. இந்நிலையில் சிலம்பப்போட்டி களே நடைபெறாத அந்தமானில் முதல் முறையாகயூத் கேம் பெடரேஷன் ஆப் இந்தியா தேசிய செயளாலர் திரு u.விஜயன் மாநில தலைவர் திரு R.சொந்தரராஜன் அவர்கள் முன்னிலையில் சிலம்ப ஆசான் சண்முகம் ஏற்பாட்டின் பேரில் சென்னை திருவொற்றியூர் யுத்த வர்ம சிலம்ப போர்கலை அகாடமி விளையாட்டு சங்கம் தமிழ்நாடு இணைந்து கடந்த ஜுன் 2ம்தேதி அந்தமான் தமிழர் சங்கத்தில் நடைபெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க இந்தநிகழ்ச்சியில் இந்தியாவின் பல மாநிலங்களிருந்து சிலம்ப வீரர்கள் வீராங்கனைகள் ஏராளமான வர்கள் கலந்துகொண்டனர். இதில் திருவொற்றியூர் யுத்த வர்ம சிலம்ப போர்கலை அகாடமி விளையாட்டு சங்கம் பள்ளி சிலம்ப வீரர்கள் வீராங்கனைகள் ஒற்றை சிலம்பம் இரட்டை சிலம்பம் சுருள் வாள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் திறமையுடன் விளையாடி 33 தங்கபதக்கங்களையும்,10 வெள்ளி பதக்கங்களையும் 8 வெண்கல பதக்கங்களையும் சான்றிதழுடன் சாம்பியன் கோப்பையையும் வென்று சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்ற சிலம்ப வீராங்கனைகள் இன்று 05.06.2024 பகல் திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் வந்த இறங்கியவர்களுக்கு யுத்த வர்மா சிலம்ப பள்ளி காப்பாளர் கே கணேசன் தலைவர் சுரேஷ் பொருளாளர் அனுராதா துணைத்தலைவர்கள் கண்ணன் கிஷோர் சிறப்பு வரவேற்பு அளித்து வீரர் வீராங்கனைகள் ஊர்வலமாக மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனிலிருந்து திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வரை அழைத்துச் சென்று பாராட்டினார்கள் .தொடர்ந்து யுத்த வர்மா சிலம்ப பள்ளி சிலம்ப ஆசான் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்
No comments:
Post a Comment