• Breaking News

    ஆரணி திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா.... காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது


    தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் விழா மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த்செந்தில் தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை கொண்டாடும் நிகழ்ச்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி என முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதை முன்னிட்டு ஆரணி பஸ் நிறுத்தம் அருகே திமுக சார்பில் பட்டாசு வெடித்தனர்.இதன்பின்னர், பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதன்பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இந்நிகழ்ச்சிகளுக்கு,ஆரணி முன்னாள் பேரூர் திமுக செயலாளரும்,பேரூராட்சிமன்ற நியமனக்குழு உறுப்பினருமான டி.கண்ணதாசன் தலைமை தாங்கினார்.பேரூர் திமுக  துணைச் செயலாளர்கள் டி.கோபிநாத்,த.நிலவழகன், மாவட்ட சிறுபான்மை துணை அமைப்பாளரும்,பேரூராட்சிமன்ற உறுப்பினருமான ரகுமான்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் வழக்கறிஞர் வெ.அன்புவாண்ணன் கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர்,பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் டி.கே.முனிவேல்,தமிழழகன், வழக்கறிஞர் கவியரசன், டி.டி.எஸ்.தினேஷ்,பாஸ்கர் வார்டு செயலாளர்கள் இளங்கோவன்,சாய்சத்யா, சூர்யா,விமல்ராஜ்,மங்கலம் கே.வெங்கடேசன்,ஈஷாஜாவித்,எஸ்.பி.உமாபதி, ஜீவானந்தம்,பாலமுருகன், விஜயன்,வசந்தகுமார் உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய, பேரூர்,கிளைகழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    No comments