தமிழகத்தில் 547 ஆம்னி பேருந்துகள் இயங்காது - MAKKAL NERAM

Breaking

Tuesday, June 18, 2024

தமிழகத்தில் 547 ஆம்னி பேருந்துகள் இயங்காது


 தமிழகம் முழுவதும் பயணிகள் சென்னை, மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 2000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதில் 547 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படாது என அதன் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ‘TN’ பதிவெண்ணாக மாற்ற வழங்கப்பட்ட கெடு நேற்றுடன் நிறைவடைந்தது.

இதன் காரணமாக இனி வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை இயக்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த 547 பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்பட உள்ளது.

No comments:

Post a Comment