கும்மிடிப்பூண்டி கே.எல். கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்டது முதலாவதாக தேசியக்கொடி ஏற்றி தேசிய கீதம் பாடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை கூறி உறுதிமொழி எடுத்தனர் இதில் பெற்றோர் ஆசிரியர் தலைவர் ஆர். ரமேஷ் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் தலைமையாசிரியர் சு. சரவணன், உறுதிமொழி வாசித்தார் இதை தொடர்ந்து பள்ளி மாணவருக்கு தமிழக அரசின் விலையில்லா.6,7,8,9,10,11, 12 ,வகுப்புக்கான பாட புத்தகங்களை வழங்கினார்கள்.
இதில் உதவி தலைமை ஆசிரியர் இரா. சுரேஷ், பெற்றோர் ஆசிரியர் கௌரவத் தலைவர் கே எல் கே சீனிவாசன் பொருளாளர் அறிவழகன் துணைத் தலைவர் இரா, ரமேஷ் ஏ, மனோகரன் ,செயலாளர் சண்முகம் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment