சிவகங்கை பேருந்து நிலையம் நாறி போய் கிடக்கிறது இப்போதுதான் உங்களுக்கு தெரிகிறதா..... எம்.பி கார்த்திக் சிதம்பரத்தை அலறவிட்ட திமுக பிரமுகர்
சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற கார்த்திக் சிதம்பரம் பேருந்து நிலையத்தை நேரில் ஆய்வு.சிவகங்கை பேருந்து நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக தற்போது நேரில் ஆய்வு செய்தேன். இங்கு, கழிப்பறை, பயணிகள் தங்குமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்வது குறித்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். இவற்றை, மக்களவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் மட்டும் செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட அரசுத்துறை நிதியையும் பெற்று மேம்பாட்டு பணியை முடிப்போம். தனியார் கட்டடக்கலை நிபுணரும் வந்துள்ளார். அதே போல நகரமைப்பு அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகத்துடன் ஆலோசனை செய்து பேருந்து நிலையப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
ரயில்வே தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளில் 49 கோரிக்கை மனுக்களை அளித்தேன். அதே அமைச்சர்தான் தற்போதும் ரயில்வேதுறைக்கு பொறுப்பேற்றுள்ளார். இதே போல பலதுறைகளுக்கும் கடந்த ஆட்சியில் இருந்த அமைச்சர்கள்தான் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்த இந்த ஆய்வின் போது திமுகவைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் சிவகங்கை பேருந்து நிலையம் நாறி போய் கிடக்கிறது இப்போதுதான் உங்களுக்கு தெரிகிறதா என கேள்வி எழுப்பினார் இதனை சட்டென்று சுதாரித்திக் கொண்ட கட்சியினர் அவரை தடுத்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர் இது குறித்து குமாரசாமியிடம் கேட்டபோது நான் திமுகவை சேர்ந்தவன் அதனால் தான் உங்களுக்கு ஓட்டு போட்டேன் ஆனால் சிவகங்கைக்கு எதுவும் செய்யவில்லை சிவகங்கை பேருந்து நிலையம் நாறி போய் கிடைக்கிறது என தெரிவித்தார்.
No comments