தேனி: சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு
சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு "அன்பு அறம் செய்" ரா.அன்பு ராஜா சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தைப் பற்றியும், குழந்தை தொழிலாளர் முறையை அறவே ஒழிப்போம் என்ற வாசகங்கள் எழுதிய மஞ்சப்பை மாணவர்கள் இடத்தில் வழங்கி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதை தொடர்ந்து இந்த நாள் ஜூன் 12 அன்பு தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. மாணவர்கள் சக மாணவர்கள் இடத்தில் அன்பாய் நடந்து கொள்ள வேண்டும், ஆசிரியர்கள் இடத்திலும், பெற்றோர்களிடத்திலும் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி மாணவர்கள் இடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய மஞ்சப்பை வழங்கப்பட்டது.இந்த நிகழ்விற்கு பள்ளி ஆசிரியர் மு.சி.செந்தில் ஒத்துழைப்பு வழங்கினார்.
No comments