இவன் யாருனே எனக்கு தெரியாது என்ற காதலி.... மனமுடைந்த காதலன் விபரீத முடிவு..... - MAKKAL NERAM

Breaking

Sunday, June 23, 2024

இவன் யாருனே எனக்கு தெரியாது என்ற காதலி.... மனமுடைந்த காதலன் விபரீத முடிவு.....

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தாரமங்கலம் ராமிரெட்டிப்பட்டி பகுதியில் செல்வம் என்ற 25 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், இளம்பெண் ஒருவரது செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி தொந்தரவு செய்வதாக செல்வம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் செல்வத்தை விசாரணைக்கு அழைத்து வந்த போது அந்த பெண் தன்னை காதலித்ததாக அவர் கூறியுள்ளார்.

பிறகு அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரித்த போது செல்வத்தை தனக்கு யார் என்று தெரியாது என அவர் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த செல்வம் போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் சென்று தீக்குச்சியில் உள்ள மருந்தை கரைத்துக் குடித்துள்ளார். இதனை அறிந்த போலீசார் உடனே அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

No comments:

Post a Comment