விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.... கூட்டணி கட்சிகளால் விழிபிதுங்கும் பாஜக - MAKKAL NERAM

Breaking

Wednesday, June 12, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.... கூட்டணி கட்சிகளால் விழிபிதுங்கும் பாஜக

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக, பாமக ஆகிய இரண்டு கட்சிகள் தனித்து போட்டியிட  முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் இடைத்தேர்தலில்  போட்டியிட வாய்ப்பு கேட்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதி நிலவரம் குறித்து கள ஆய்வு நடத்த டிடிவி தினகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . இப்படி பாஜகவுக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுப்பதால் பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment