சிவகங்கை: ஆபத்தை உணராமல் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய மாணவர்களை உட்படுத்திய தலைமை ஆசிரியர் - MAKKAL NERAM

Breaking

Wednesday, June 12, 2024

சிவகங்கை: ஆபத்தை உணராமல் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய மாணவர்களை உட்படுத்திய தலைமை ஆசிரியர்


சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே குமாரபட்டி அரசு உயர்நிலை பள்ளியில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்களை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய தலைமை ஆசிரியர் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குமாரபட்டி ஊராட்சி. இவ்ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபட்டி கிராமத்தில் சுமார்  60 ஆண்டுகளுக்கு மேலாக நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் முன்பு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு அரசால் தனியாக புதிய கட்டிடம் கட்டி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்து வருகிறார்கள். கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகள் முழுவதும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் குமாரபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களைக் கொண்டு ஆபத்தான முறையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய மாணவர்களை தலைமை ஆசிரியர் ஈடுபடுத்திய சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குமாரபட்டி தலைமை ஆசிரியர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் இதுபோன்று வேறு பள்ளிகளில் ஆபத்தான செயல்களை செய்ய தூண்டுவது தவிர்க்கப்படும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment