• Breaking News

    பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி புத்தகம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்


    பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மறைமலை அடிகள் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, புத்தகம் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர் இதில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி  பள்ளி வளாகத்தில் உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டார். இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    No comments